திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அடுத்த அட்வகேட் ராமநாதன் தெரு பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிலையில் பம்பை இசை, கணபதி பூஜை, சிவபுராணம், தேவாரம், இரண்டாம் கால பூஜைகள் தொடக்கம், கணபதி ஹோமம் , பிரதான ஹோமங்கள், மகாலட்சுமி நவகிரக ஹோமங்கள், விஸ்வரூப தரிசனம், மங்கள ஆர்த்தி, மூலமந்திர ஹோமம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் கோபுர காலசத்தின் மீது தீப ஆராதனை செய்யப்பட்டு மலர் தூவி புனித நீர் ஊற்றி பின்பு பக்தர்கள் மீது தெளித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவரும் ஓம்சக்தி பராசக்தி என்று கோசம் எழுப்பினர். இதில் சுற்றுவட்டார பக்தர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது



Leave a Reply