ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தக்கன்குளம் அமராவதி நகர் முதல் தெருவில் உள்ள எட்டி மண்டபம் சுமார் 600 ஆண்டு பழமை வாய்ந்தது.ஒவ்வெரு ஆண்டும் பக்தோசிப்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சுவாமி சித்திரை, தை, மாதத்தில் எட்டி மண்டபத்தில் எழுந்தருளி அப்பகுதி மக்களுக்கு காட்சி தந்து அருள் பாலிப்பார். இந்த மண்டபம் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது.
எட்டி மண்டபத்திற்கு ஸ்ரீ ரங்கநாதர் கைங்கரிய அறக்கட்டளை வி.பி.என் நாகராஜ் அவர்கள் ஏற்பாட்டில் தரை மட்டத்திலிருந்து மண்டபத்தை 5 அடி உயர்த்தி,புதுப்பிக்கப்பட்டு வாஸ்து ஓமம், சுதர்சன ஓமம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு மண்டபத்தில் மங்கள வாத்தியங்களுடன் வாஸ்து ஓமம் , சுதர்சன ஹோமம்,கலச பூஜை , 108 மூலிகை கொண்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
பூஜை செய்யப்பட்ட கலச புனிதநீரை எட்டி மண்டபத்தில் மீது உள்ள திரு நாமம், சங்கு, சக்கரத்தின் மீது ஊற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது.இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள்.
Leave a Reply