காட்பாடியில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாற்றுத்திறனாளிகள் செவிதிறன் கருவிகள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைபேசிகள் ,அதிநவீன பேட்டரி சக்கர நாற்காலிகள் செயற்கை கைகால்கள் ஆகியவைகளை ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

இதில் மாற்றுத்திறன் மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது இவ்விழாவில் வேலூர் மேயர் சுஜாதா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்

Loading