திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அருங்கல் துருகம் ஊராட்சிக்கு உட்பட்ட சுட்ட குண்டா கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் ஒரு ஏக்கரில் 15000 செலவில் நெல் பயிரிட்டுள்ளார். இன்னிலையில் நேற்று இரவு விளை நிலத்தில் புகுந்த இரண்டு காட்டு யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்தியும் அருகில் இருந்த குடிசையும் சேதப்படுத்தி இரண்டு மாட்டு தீவனம் மூட்டைகளையும் சேதப்படுத்தி உள்ளது.
மேலும் அதே கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 30 வாழை மரங்கள் மற்றும் இரண்டு தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தமிழக அரசு வனத்துறைக்கு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கவும் பயிர்களை சேதப்படுத்தாமல் பாதுகாப்பு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் சேதப்படுத்த பயிருக்கு நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply