அனுமதியின்றி இருசக்கர பேரணி நடத்திய பாஜகவினர், தடுத்து நிறுத்திய காவல்துறையுடன் வாக்குவாதம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று இளைஞரணி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதன் காரணமாக திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.

இந்த பேரணிக்கு முறையான அனுமதி பெறாததால் போலீசார் இருசக்கர வாகன பேரணி இல்லை அதன் காரணமாக செல்லக்கூடாது எனவும் கூறினர் இருந்த போதிலும் அதனை மீறி பாஜகவினர் பேரணியாக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

இதனையடுத்து பேரணிக்கு அனுமதி இல்லை என்ற கூறி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பாஜகவினருக்கும்  காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Loading