இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்திற்காக வித்திட்ட வேலூர் கோட்டையில் 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் பங்கு பெற்ற பீரங்கி படை 195 ரெஜிமெண்ட்டை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சந்திக்கும் நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது. காஷ்மீர் அருகே பூஞ்ச் பகுதியில் டிசம்பர் 3 ஆம் நாள் முதல் எட்டு நாட்கள் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த போரில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கு பெற்றனர்.
அந்நாளை நினைவு கூறும் விதமாக 50 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வேலூர் கோட்டையில் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வெற்றி நாளை நினைவு கூர்ந்தனர். இதில் உயிருடன் உள்ள 80 ராணுவ வீரர்கள் குடும்பங்களுடன் தங்களோடு பணியாற்றிய சக ராணுவ வீரர்களை சந்தித்து கட்டி தழுவி நினைவுகளை பரிமாறிகொண்டனர். இது போன்ற வெற்றி நாட்களை பணியில் உள்ள ராணுவ வீரர்கள் மட்டுமே கொண்டாடும் நிலையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நிகழ்ச்சியை கொண்டாடினார்.
நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் சிப்பாய் நினைவு தூணிலிருந்து தொடர் ஓட்டமாக கரசமங்கலம் வரையில் சென்று அங்கு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேற நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தங்களின் நினைவுகளை ஒருவருக்கொருவர் குடும்பத்தினருடன் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
Leave a Reply