ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கனககுஜம்பாள் சமேத சோழபுரீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத மூன்றாம் சோமவாரம் சிறப்பு 108 சங்காபிஷேகம் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பூர்ணிமா ரவிச்சந்திரன் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் நடைப்பெற்றது.
இதனை முன்னிட்டு கனககுஜம்பாள் சோழபுரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்று மங்கள வாத்தியங்களுடன் கலசபூஜை,108 சங்கில் புனித நீர் ஊற்றி,108 மூலிகை கொண்டு சிறப்பு யாக பூஜை , பூர்ணாஹீதி நடைபெற்றது.
கலசம்,108 சங்கு எடுத்து திருக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சோழபுரீஸ்வரருக்கு சிறப்பு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கபட்டது.
Leave a Reply