கேரள வனத்துறையினர் அதிரடி.

கேரள வனத்துறையினர் அதிரடி. வீட்டில் பதுக்கிய வேட்டை துப்பாக்கிகள், யானைத்தந்தம், புலி மற்றும் கரடியின் நகங்களை பறிமுதல்,மூவர் கைது.  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசியம் தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கொச்சி வனவிலங்கு குற்றத் தடுப்பு பணியகம் மற்றும் வனப்புலனாய்வு பிரிவினர் அட்டப்பாடி வனத்துறையினர் ஒன்றிணைந்து அட்டப்பாடி வனப்பகுதியில் சோதனை நடத்தினர்.

குறிப்பாக அட்டப்பாடி புதூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடங்களில் நேற்று முன்தனம் நடத்திய சோதனையில் இளஞ்சிவழியை சேர்ந்த ஷபி என்பவரின் வீட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டு, ஆறு துப்பாக்கி குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும் இரண்டு யானை தந்தங்கள் கரடி மற்றும் புலியின் நகங்கள், பற்கள் ஆகியவற்றை கண்டறிந்த வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். இதனைத்  தொடர்ந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்து வனத்தில் வேட்டையாடிய, இளவஞ்சிவழியைச் சேர்ந்த ஷபி, மலப்புரத்தைச் சேர்ந்த யூசுப் கான், மலப்புரம் மேலூற்றைச் சேர்ந்த அஸ்கர் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைத்தனர்

Loading