சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளின் உள்கட்டமைப்பு மற்றும் பள்ளி கட்டடங்களுக்கு நிதி திரட்டும் வகையில் குட்டீசுகளுக்கான சைக்கிள் போட்டி.

கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் – 186 மூலம்” குட்டி ரோடீஸ் – 23″ என்ற குழந்தைகளுக்கான பிரத்யேகமாக நடத்தப்படும் ஒரு மெகா சைக்கிள் போட்டி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை ரவுண்ட் டேபிள் இந்தியா (ஆர்.டி.ஐ.) இந்தியா முழுவதும் உள்ள 3,616 பள்ளிகளில் 8,665 வகுப்பறைகள் ரூ.437 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகளால் 95.3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பயனடைந்துள்ளன, அதாவது சராசரியாக இந்த அமைப்பு மூலம் இந்தியாவில் ஒரு நாளைக்கு 1 வகுப்பறைக்கு மேல் கட்டப்பட்டுள்ளது. 

குட்டி ரோடீஸ் நிதி திரட்டலின் முதல் பதிப்பு ரூ. 2,00,000 வசூல் செய்தது, இரண்டாவது பதிப்பு ரூ.10,00,000 இலக்கை நிர்ணயித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் குட்டி ரோடீஸ் 23 இல் பங்கேற்க சுமார் 1,000 குழந்தைகள் பதிவு செய்து இந்த போட்டியில் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக திரு ஜி.சந்தீஷ் – கோவை வடக்கு போலீஸ் துணை போலீஸ் கமிஷனர் கொடி அசைத்து போட்டியை துவக்கித்தார். 

இந்த நிகழ்வில் கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 – தலைவர் கார்த்திக் மணிகண்டன், செயலாளர்சதீஷ் கிருஷ்ணா, பொருளாளர்  புளூவின் ஜோஸ் உள்பட பலர் முக்கிய பிரமுகர்களாக பங்கேற்றனர். இந்த குட்டீஸ்களுக்கான விளையாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  நமது சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளின் உள்கட்டமைப்பு மற்றும் பள்ளிக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Loading