புற்றுநோயை எண்டோஸ்கோபி மூலம் கண்டறிந்து குணப்படுத்த முடியும் என வி.ஜி.எம் மருத்துவமனையின் மருத்துவர் மதுரா தெரிவித்துள்ளார்.

ஆரம்பகால நிலை புற்று நோய்களை எண்டோஸ்கோபி மூலமாக எளிதில் கண்டறிந்து அகற்ற முடியும் என வி.ஜி.எம் மருத்துவமனையின் மருத்துவர் மதுரா தெரிவித்தார். கனடாவில் உள்ள அமெரிக்கன் காலேஜ் ஆப் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி சர்வதேச மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் வி.ஜி.எம்  மருத்துவமனை சார்பில் மருத்துவர் மதுராபிரசாத்சுமன் பங்கேற்று சிறுகுடலில் உருவாகும் ஆரம்ப நிலை புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை இல்லாமலேயே எண்டோஸ்கோபி மூலம் முழுமையாக அகற்றும் வழிமுறையை பகிர்ந்து கொண்டார். 

இந்த வழிமுறையையும் தொழில்நுட்பத்தையும் பாராட்டி அவருக்கு பிரசிடென்ஷியல் விருது, எண்டோஸ்கோப்பித்துறையின் ஹவுஸ் ஸ்டாண்டிங் போஸ்டர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வி.ஜி.எம் மருத்துவமனை நிறுவனர் மோகன் பிரசாத் மற்றும் மருத்துவர் மதராப்பிரசாத் ஆகியோர் செய்தியாளிடம் கூறும் போது கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஆரம்ப கால பாதிப்புக்களை கடந்து, இறுதி கட்ட நிலையிலேயே பாதிக்கபட்டோர் மருத்துவமனையினை நாடுவதாகவும் தெரிவித்தார்.

உணவு குழாய், இரைப்பை, பெருங்குடல் மற்றும் சிறுகுடல் ஆகிய பகுதிகளில் உருவாகும் புற்றுநோய் கட்டிகளை ஆரம்பகால நிலையிலேயே கண்டறிய நவீன எண்டோஸ்கோப்பி உபகரணங்கள் உதவுவதாகவும், இதன் மூலம் பயாப்ஸி இல்லாமலேயே புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய முடியும் என்றார். வி.ஜி.எம் மருத்துவமனையில் 35 ஆயிரத்து 315 எண்டோஸ்கோபி, 225 ஆரம்ப கால புற்றுநோய்களை கண்டறிந்துள்ளோம் என தெரிவித்தார்.

Loading