கனமழை எச்சரிக்கையால் ஊட்டி மலைரயில் சேவை வரும் 13ஆம் தேதி வரை ரத்து.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் –  ஊட்டி இடையே யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்ற சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இன்னிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை பொழியும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நேற்று 10ம் தேதி வரை ஊட்டி ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மலை ரயில் செல்லும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று வரை அதாவது 10 தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை வரும் 13ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மலை ரயில் சேவை தொடர்ந்த ரத்து செய்யப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading