பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மத நல்லிணக்க “சமத்துவ கிறிஸ்துமஸ் விழா” கேக் வெட்டி கொண்டாடபட்டது.

கோவை போத்தனூர் பகுதியில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமத்துவம் சகோதரத்துவம் தலைதொங்கும் விதமாக, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் இணைந்து “சமத்துவ கிறிஸ்மஸ் விழா” கொண்டாடபட்டது. 

இதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, இந்து மடாதிபதிகள், இஸ்லாமிய குருமார்கள், கிறிஸ்தவ ஃபாதர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுமக்கள் ஏழை எளியோரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் மும்மதத்தினர் கிறிஸ்துமஸ் விழா கேக் வெட்டி கொண்டாடினர். மேடையில் உரையாற்றிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், பீட்டர் அல்போன்ஸ், ஜவாஹிருல்லா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் மத நல்லிணக்கத்தை, சமத்துவம் சகோதரத்தை வலியுறுத்தி விழாவில் உரையாற்றினர். விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Loading