கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள தொண்டாமுத்தூர், மருதமலை, தடாகம், பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் கூட்டங்களாக காட்டு யானைகள் ஊருக்குள் வருவதும், விளை நிலங்கள் மற்றும் விளை பொருட்கள சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கபடுவதுடன், யானைகளால் தாக்கபடுவதும் மனித உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இன்னிலையில் கடந்த சில தினங்களாக 5 யானைகள் மற்றும் 7 யானைகளை கொண்ட இரு யானை குழுக்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இன்னிலையில் கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் கதிரவன் என்பவரது தோட்டத்தில் புகுந்த 7 யானைகள் தென்னை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக 5 யானைகள் மற்றும் 7 யானைகள் இரு கூட்டங்களாக வரும் காட்டு யானைகள் தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் வனத்திற்குள் விரட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் யானைகளை காட்டிற்கும் அனுப்பும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஒன்று, இரண்டு எண்ணிக்கையில் வந்த யானைகள் தற்போது 7 யானைகள் வரை குழுக்களாக வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Leave a Reply