கோவை, சங்கமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் முகூர்த்த கால நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கொங்கு நாட்டிற்கு வந்த சோழ மன்னன் ஒருவரும் சமய முதலி என்ற குழுவினர்களும் காடு திருத்தி நாடு அமைத்து 36 ஆலயங்களை கட்டினர் அந்த 36 ஆலயங்களில் ஒன்று தான் ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில். பழமையான கோவில்களில் சங்கமேஸ்வரர் இருக்கும் கருவறையை மிகவும் பழமையானது இந்த கருவறையின் மேல் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விமானம் உள்ளது.

விமானங்கள் இல்லாமல் கருவறை மட்டும் காணப்படும் கோயில்கள் முதலாம் பராந்தக சோழன் கிபி 907-948 கட்டப்பட்டவை என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இக்கோயில் முதலாம் பராந்தக சோழன் கட்டியுள்ளார் என்பதை நாம் அறிய முடிகிறது. மேலும் கோயில் கருவறை மற்றும் கருவறை கற்றூண்கள் கிபி பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலை கொங்கு சோழர்களான வீரநாராயணன், வீர ராஜேந்திரன், விக்ரம சோழன் பாதுகாத்துள்ளனர். இவர்கள் காலத்தில் கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளது மூன்றாம் விக்கிரம சோழனுக்கு பின் கொங்கு நாட்டில் ஒய்சாளர் ஆட்சி அமைந்தது.

பின்னர் முகம்மதியர் ஆட்சிக்கு பின் வந்த விஜயநகர பேரரசு கோவிலை சீர்படுத்தி சங்கமேஸ்வரர் என பெயர் வைத்து வழிபட்டுள்ளனர். இந்த கோயிலில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது வரும் ஜனவரி 21ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக கோயில் திருப்பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கி பணி நடந்து வருகிறது.

தற்போது 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இந்த நிலையில் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முகூர்த்தகாலை ராஜா சர்வசாதங்கம் நேற்று நட்டார். இதை அடுத்து யாகசாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது திருப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என இந்த அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading