மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு, நிவாரண பொருட்களை அனுப்பிய கோவை தன்னார்வ அமைப்பு.

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில  நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து உண்ண உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து, தென்றல் அறக்கட்டளை தலைவர் சித்திக்  தலைமையில் மூன்று வாகனத்தில் நிவாரண பொருட்கள் தூத்துக்குடியை நோக்கி அனுப்பப்பட்டது. 

இதில் போர்வைகள், துண்டுகள், அரிசி, பிஸ்கட், தேன், தண்ணீர் பாட்டில்கள், மற்றும் ரொட்டிகள் போன்ற பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கபட்டது.  தென்றல் அறக்கட்டளையின்  வாகனத்தில் அனுப்பபட்ட நிவாரண பொருட்களுடன் தென்றல் அறக்கட்டளை குழுவினரும் உடன் செல்கின்றனர். மேலும் கோவை கோட்டை இதாயத்துல் இஸ்லாம், சுன்னத் ஜமாத் தலைவரும் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஹாஜி எம்.ஏ.ஹினாயத்துல்லா,  கொடி அசைத்து அனுப்பி வைத்தனர். 

இதில்  மனித நேயம் ஃபவுண்டேஷன் டிரஸ்டின் தலைவர் கோவை எம். சுலைமான் ஆத்துப்பாலம் இருஷத்துல் இஸ்லாம் ஷாபியா சுன்னத் ஜமாத்  பள்ளிவாசலின் தலைவர் எம் கே ஃபாரூக், செயலாளர்  அபு , பொருளாளர் ஏ.ஆர்.அபுதாஹிர்  முத்தவல்லி ரஹ்மத்துல்லாஹ்  உமன் சொசைட்டி துணைச் செயலாளர் கோவை பைசல்  அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் மயிலாஞ்சி சேட்  குறிச்சி பிரிவு வியாபாரிகள் நல சங்கத் தலைவர் கிதர் முகமது  சமூக ஆர்வலர் பெரோஸ் மற்றும் பள்ளிவாசல்  நிர்வாகிகளும் தென்றல் அறக்கட்டளையின் குழுவினரும் பங்கேற்றனர்.

Loading