கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா ஆண்டு வரும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9- வது ஆண்டு ஷாப்பிங் திருவிழா வருகின்ற 23ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 1ம் தேதி வரை 10 நாட்கள் கொடிசியா வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து கொடிசியா தலைவர் திருஞானம், கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழாவின் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் நந்தகோபால், கொடிசியா செயலாளர் சசிகுமார் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா கொடிசியா வர்த்தக மைய வளாகத்தின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் பல்வேறு பொழுதுபோக்கு, உணவு மற்றும் விளையாட்டுகள் இடம் பெறுகின்றன. வருகின்ற 30ஆம் தேதி நடிகர் டைரக்டர் கே.பாக்யராஜ் குழுவினரின் பட்டிமன்ற நிகழ்ச்சி, 24ஆம் தேதி லட்சுமண் சுருதியின் இசை கச்சேரி, சூப்பர் சிங்கர் முகேஷ், சையத், வானதி மற்றும் தன்யா ஸ்ரீ பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, 25ஆம் தேதி கோமல் தியேட்டர்ஸ் சார்பில் திரௌபதியின் கதை என்ற இதிகாச மேடை நாடகம் நடைபெற இருக்கிறது. மேலும் 29ஆம் தேதி கோவை, சேலம் மற்றும் வேலூர் இசைக்குழுவினருக்கு இடையேயான இசைப்போட்டி, மேஜிக் ஷோ, மிமிகிரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்கார பொருட்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், பரிசு பொருள்கள், சூரிய ஒளி சாதனங்கள், இயற்கை உணவுகள், பூஜை பொருள்கள், பர்னிச்சர் வகைகள், ஜவுளி, ஃபேஷன், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், காலனிகள், தஞ்சாவூர் ஓவியங்கள் சாப்பிங் விழாவில் இடம் பெறுகின்றது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கபடுவர் இதற்கு நுழைவு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 50 வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். கடந்த எட்டு 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த ஷாப்பிங் திருவிழா தற்பொழுது ஒன்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு நல்ல வர்த்தகம் நடைபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் இந்த ஆண்டில் ரு.25 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
Leave a Reply