கோவையில் இரு காட்டு யானைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை உயரிழப்பு.

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மருதமலை முருகன் கோவிலுக்கு இரவு நேரங்களில் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இன்னிலையில் இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகிறது. குறிப்பாக பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் பகுதிகளில் தொடர்ச்சியாக யானை நடமட்டும் இருந்து வருகிறது. 

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் பின்புறம் பகுதியில் உள்ள வனத்தில் ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் நேற்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை எடுத்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர் விஜயராகவன் உயிரிழந்த யானையின் உடலை ஆய்வு செய்தார். அப்போது யானையின் உடலில் பல்வேறு இடங்களில் வேறு ஒரு யானையுடன் சண்டையிட்டு ஏற்பட்ட காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. 

இதனால் உயிரிழந்த யானை மற்றொரு யானையுடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக இறந்து இருக்கலாம் என வனதுறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த ஆண் யானை 25 வயது உடையது எனவும் யானையின் உடல்  பிரேத பரிசோதனைக்கு பின் அங்கேயே புதைக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Loading