மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஜெப கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் போத்தனூர் 96வது டிவிஷனுக்கு உட்பட்ட மருதப்பிள்ளை வீதியில் குடியிருப்பு பகுதியில் மதக்கூட்டம் நடந்து வருகிறது. அதிகமாக ஒலி எழுப்பி பொதுமக்களை மதக்கூடத்திற்கு அழைக்கின்றனர். இதனால் முதியோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

காவல்துறையினர் எச்சரித்தும் கூட மதக்கூட ஏற்பாட்டாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பதனை நிறுத்தவில்லை. எனவே அனுமதியில்லாத மத கூடங்களை தடுத்து நிறுத்த வேண்டும் இவ்வாறு மனுவில் குறிப்பிட்டது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோட்ட செயலாளர் பாபா ஆர் கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயசங்கர், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட செய்தியாளர் மற்றும் வட்ட செயலாளர்கள் ஆனந்த் ஆறுசாமி மகேஸ்வரன் மாவட்ட செய்தி செயற்குழு உறுப்பினர் ஹரிந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading