கோவை தெற்கு தீயணைப்பு துறைக்கு ரூபாய் 22 கோடியில் ஸ்கை லிப்ட் வாகனம்..

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் நவீன தீயணைப்பு ஸ்கை லிப்ட் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான  சோதனை ஓட்டம்  திருச்சி சாலையில் நடத்தப்பட்டது. கோவை மாநகரில் நாளுக்கு நாள் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பல அடுக்குமாடிகளை கொண்ட தொழில் நிறுவனங்கள் என கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் இது போன்ற அடுக்குமாடி கட்டிடங்களில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று உயரமான இடத்துக்கு செல்ல வீரர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வான் நோக்கி நகரும் வாகனம் இல்லாததால் தீயணப்புவீ மற்றும் பாதுகாப்பு பணி வீரர்கள் வெளியே இருந்து பொதுமக்களை மீட்பதில் சிரமம் அடைந்தனர். சிலர் உயிருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்து கை, கால்களை முறித்துக் கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். இந்த சம்பவத்திற்கு பின் தீயணைப்பு துறைக்கு வான்நோக்கி நகரும் ஊர்திகள் வாங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். தீயணைப்புத்துறை அதிகாரிகளும் அரசு கருத்துருக்களை அனுப்பி வைத்தனர். இதை அடுத்து தற்பொழுது தெற்கு தீயணைப்புத்துறை நிலையத்திற்கு புதிதாக வானோக்கி நகரும் ஊர்தி (ஸ்கை லிப்ட்) வாங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் மிக உயரமான இடங்களில் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து தடுக்க முடியும். இது குறித்து தீயணைப்பு துறை உயர் அதிகாரிகள் கூறும்போது தமிழக அரசு மூன்று வான் நோக்கி நகரும் ஊர்தி ஸ்கை லிப்ட் வாகனம் வாங்கி உள்ளது. அவை சென்னை, திருச்சி, கோவை என மூன்று மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவைக்கு வழங்கப்பட்டுள்ள வாகனம் ரூபாய் 22 கோடி என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வான்நோக்கி நகரும் உறுதி 1330 அடி உயரம் வரை செல்லக்கூடியது. இதில் 13 மாடி உயரம் வரை சென்று அசம்பாவித சம்பவங்களை தடுக்கலாம் மற்றும் உயரமான இடங்களில் விபத்து ஏற்பட்டாலும் இந்த வாகனம் மூலம் தீயை அணைக்க முடியும். மேலும் வாகனத்தை ரோட்டில் நிறுத்திவிட்டு ஜன்னல் பால்கனி வழியாக லிப்ட் அனுப்பி பாதிக்கபட்டோரை காப்பாற்ற முடியும். இந்த லிப்ட் 320 டிகிரியில் சுழலும் தன்மை கொண்டது. ஸ்கை லிப்டில் ஐந்து பேர் வரை செல்ல முடியும் 400 கிலோ எடை வரை தாங்கும் தன்மை கொண்டது. 10 சக்கரங்களை கொண்ட இந்த வாகனம் 25 அடி சாலையில் தான் செல்ல முடியும் வாகனத்தை தவறுதலாக இயக்கினால் சென்சால் மூலம் அலாரம் ஒலித்து எச்சரித்து விடும். இந்த வாகனத்தை இயக்குவது குறித்து எட்டு பேருக்கு ஒரு மாதம் சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு வாரமாக வளாகத்துக்குள் வீரர்கள் பயிற்சி பெற்று வாகனத்தை சாலையில் இயக்கி வருகின்றனர் என தெரிவித்தனர்

Loading