மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த கோவை மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்.

ஐந்தாவது மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் தஞ்சையில் நடைபெற்றது. இதில் கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கோவையிலிருந்து ஐந்து முதல் 21 வயது வரையிலான 52 மாணவ மாணவிகள் போட்டிகள் பங்கு பெற்றனர். சப் ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 

தொடும் முறை, ஒற்றை மற்றும் இரட்டைக் கம்பு என அனைத்து பிரிவுகளிலும் 9 தங்கம், 12 வெள்ளி, 22 வெண்கலம் என பதக்கங்களை வென்று கோவை மாணவர்கள் அசத்தினர். பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயிற்சியாளர்கள் தியாகு, நாகராஜ், சிவா முருகன் அரவிந்த், வித்சங்கர், பாரத், கிருஷ்ணா, மதன், பிரசாத் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Loading