திருநங்கை முன்மாதிரி விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 ஆம் தேதியன்று சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறிய திருநங்கை ஒருவருக்கு முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது. இன்னிலையில் திருநங்கைகள் தினத்தில் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருது என்பது ரூ.1லட்சம் காசோலை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. 

2024 ஆம் ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறியிருத்தல் வேண்டும், குறைந்தது 5 திருநங்கைகளுக்காகவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்திருக்க வேண்டும், திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது, விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் உரிய கருத்துக்களுடன் www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துருக்களை வரும் ஜனவரி 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலமாக அல்லது நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் காந்திக்குமாறு பாடி தெரிவித்துள்ளார்.

Loading