வால்பாறையில் தாயை பிரிந்த பிறந்து 4 மாதமே ஆன பெண்குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீண்டும் தாயிடம் சேர்த்தனர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னி மேடு எஸ்டேட் இரண்டாவது டிவிஷன் பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் வால்பாறை-சாலக்குடி சாலையில் பிறந்த நாலு மாதமே ஆன பெண் குட்டியானை ஒன்று சுற்றித் திரிவது தெரியவந்தது. அப்பகுதி வழியாக வந்த அரசு பேருந்தின் மீது மோதுவது போல் குட்டியானை சென்றுள்ளது. இதை பார்த்த பஸ் டிரைவர் உடனடியாக பேருந்து நிறுத்தியதால் குட்டி யானை உயிர் தப்புயுள்ளது.
இதனையடுத்து டிரைவர் குட்டியானை குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டியானைக்கு உணவு தண்ணீர் கொடுத்து கண்காணித்தனர். இதற்கிடையே வனத்துறையினர் ட்ரோன் மூலம் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவனம் பகுதியில் தாய்யானை மேய்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதை எடுத்து மானாம்போலி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் பெண்குட்டி யானையை வேனில் ஏற்றி சிறுவனம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் வேனில் இருந்து குட்டி யானையை இறக்கிய வனத்துறையினர். அதற்கு தண்ணீர், உணவு கொடுத்து தாயானை இருக்கும் இடத்திற்கு அருகில் கொண்டு சென்றனர். தாயானையைப் பார்த்தவுடன் குட்டியானை ஓடி சென்று மகிழ்ச்சியுடன் சேர்ந்துகொண்டது. இச்சம்பவம் வால்பாறை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply