கோவை ஹோப் காலேஜ் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் வழியில் செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதி ஓ பை தாமரா. நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த நட்சத்திர விடுதியில் ஊழியர்கள் அனைவரும் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மாறாமல் பொங்கல் விழாவை கொண்டாடினர். குறிப்பாக ஹோட்டல் மேலாளர் முதல் அனைத்து ஊழியர்களும் பாரம்பரிய உடை அணிந்து புதிய பானையில் பொங்கல் வைத்து தை திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடினர்.
இது குறித்து பேசிய ஓ பை தாமரா ஹோட்டலின் பொது மேலாளர் உமாபதி, கோவையில் துவங்கபட்ட ஓ பை தாமரா நட்சத்திர விடுதி துவங்கி சில மாதங்களே ஆனதால் இந்த பொங்கல் திருநாளை தலை பொங்கலாக கொண்டாடுவதாக தெரிவித்தார். மேலும் பொங்கல் விழா குறித்து பேசிய ஓ பை தாமரா ஹோட்டலின் தலைமை செஃப் விவசாயிகள் அதிகளவில் உள்ள கோவை மாவட்டத்தில் ஓ பை தாமரா ஹோட்டல் துவங்கபட்டுள்ளதால் மண் மணம் மாறாது சிறு தானியங்களை கொண்டு சிறப்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்து பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடியதாக தெரிவித்தார்.
Leave a Reply