கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான சாலைகள் குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றன. ஒரு சில சாலைகள் புதிதாக போடப்பட்டு வருகின்றன. ஆனால் கோவை மாநகர சாலைகளில் பயணிக்க இருசக்கர வாகன ஓட்டிகள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க இயலாது.
இந்த நிலையில் புரூக்பாண்ட் சாலையில், காமராஜபுரம் அருகே பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. சாலை குறுகியதாக இருப்பதாலும், வாகனங்கள் அதிகமாக செல்வதால், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலேயே , வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் இளைஞர் ஒருவர் தனது சக்கர வாகனத்தில் புரூக் பாண்ட் சாலையில் வந்து கொண்டிருந்த போது, நிலை தடுமாறி, சாக்கடை கால்வாயில் , வாகனத்துடனே கீழே விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக, கீழே விழுந்த வாலிபரையும், இருசக்கர வாகனத்தையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக வாலிபருக்கு ஒன்றும் ஆகவில்லை. குறுகிய சாலையில் மேலும், விபத்துகள் ஏற்படும் முன் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply