கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மரவள்ளி, வாழை, தக்காளி, சின்ன வெங்காயம் போன்ற பயிர் வகைகளை அதிக அளவில் சேதப்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த விவசாயிகல் பல வகையில் கையாண்டும் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இன்னிலையில் கோவை தீத்திபாளையம் மயில்சாமி கவுண்டர் என்பவர் தோட்டத்தில் இரவு நேரத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் சின்ன வெங்காய நடவு காட்டில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 60 நாட்கள் ஆன சின்ன வெங்காயம் ஒரு ஏக்கர் பரப்பளவில் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிக்கு மன உளைச்சல் மட்டுமல்லாது 70 ஆயிரம் ருபாய்க்கும் மேல் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாய சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்றும் மேலும் சின்ன வெங்காயம் சேதத்தினை கணக்கீடு செய்து விவசாயிக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு அரசு வனவிலங்குகள் சம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு வன உயிரின மோதல் தடுப்பு குழு என்ற ஒரு குழுவை ஏற்படுத்தி அந்த குழு தற்சமயம் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து குறிப்பாக காட்டுப்பன்றிக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் கேரளாவில் நடைமுறையில் இருக்கும் பன்றிகளை சுட்டுக்கொன்று விவசாய பயிர்களை காப்பாற்றுவது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலன் கருதி விவசாயிகளை பொருளாதார இழப்பீட்டிலிருந்து மீட்க பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்க சார்பாக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
Leave a Reply