கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020 மற்றும் 2021 ஆண்டு படிப்பு முடிந்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் துணை வேந்தர், முனைவர் பஞ்சனாதம் கலந்து கொண்டார்.
பின்னர் மாணவ,மாணவிகளிடம் பேசுகையில் நீங்கள் ஒரு நல்ல கல்லூரியில் படித்து கொண்டு உள்ளீர்கள், இந்த கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நன்றாக பயன்படுத்தி கொண்டு உங்கள் வாழ்வில் மிக பெரிய இடத்திற்கு வர வேண்டும், குறிப்பாக மாணவர்கள் எந்த துறையில் பயின்றாலும் அந்த துறைக்கான திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டும் என்றார். அதே போல் உங்கள் கல்லூரியின் நிர்வாக இயக்குனர், முதல்வர் இவர்கள் எல்லோரும் உங்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கிறர்கள் என்றவர் அவர் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.
மேலும் பட்டம் வாங்கும் அனதை்து மாணவ,மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 232 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் கல்லூரி தாளாளர் கதிர், செயலர் திருமதி லாவண்யாகதிர், கல்லூரி முதல்வர் முனைவர் கற்பகம், மற்றும் துறை தலைவர்கள் , பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply