வருகின்ற சனிக்கிழமை வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்.

மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் வட்ட வழங்கள் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் வருகின்ற ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவிநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொருமாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்துார் மாவட்டத்தில் அனைத்துவட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்டவழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகர்கள் நடைபெற்று வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக மார்ச் 2024 மாதத்தில்  09.03.2024 தேதி காலை 10.00 முதல் 1.00 மணிவரை பொதுவிநியோகத் திட்ட குறைதீர் சிறப்புமுகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கிவரும் வட்டவழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர் முகாமில் குடும்பஅட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்பஅட்டை, அலைபேசிஎண் மாற்றம் மற்றும் குடும்பதலைவர் புகைப்படம் மாற்றம், தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading