கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் நலத்திட்ட உதவிகள் குறித்தான புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த புகைப்பட கண்காட்சியில் இரண்டரை ஆண்டுகள் அமைச்சரின் திட்டங்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்பட கண்காட்சி ஒரு வாரத்திற்கு தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
அதுமட்டுமின்றி இந்த கண்காட்சியில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கைவினைப் பொருட்கள் உணவு பலகார அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் மற்றும் துணை மேயர் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply