தூய்மை பணியாளர்கள், வரி வசூலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய கோவை மாநகராட்சி.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 98 வது வார்டில் தூய்மை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், வாகன ஓட்டுநர்கள், மற்றும் சிறப்பாக வரி ஈட்டிய வரி வசூலர்கள் உள்ளிட்டவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். 

தொடர்ந்து மத்திய மண்டலம் 67 வது வார்டுக்கு உட்பட்ட ராம் நகர், தேசபந்து பகுதியில் நடைபெற்று வரும் மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த போது அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகம் ஒன்று மக்கும் குப்பை மக்காத குப்பைகளை சரியான முறையில் தரம் பிரித்து வழங்காதது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வணிக வளாகத்திற்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Loading