தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அடுமனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வருகின்ற 13,14 ஆகிய இரண்டு தினங்கள் அடுமனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுமனை உணவுப் பொருட்களுக்கு தற்பொழுது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கிய காரணம் விரும்பத்தக்க வகையிலும் பற்சுவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பதே ஆகும். இந்த பயிற்சி சிறுதொழில் முனைவோர்க்கு வருமானத்தை பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பயிற்சியில் ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும், இதில் ஆர்வம் உள்ளவர்கள் ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.1770 செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு  0422-6611268 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் phtc@tnau.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading