தென்பட்டது பிறை, நாளை முதல் புனித ரமலான் நோன்பு ஆரம்பம்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையானது ரமலான் பண்டிகை. ஆண்டுதோறும் பிறை பார்க்கப்பட்டு மாதம் முழுவதும் நோன்பிருந்து இறைவனை வழிபடுவார்கள். அதேபோல இந்த ஆண்டு கோயமுத்தூர் அத்தார் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக பிறை பார்க்கும் நிகழ்வு தலைவர் ஆசிரியர் அமானுல்லா அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. 

இதில் பேராசிரியர் செயலாளர் பீர் முகமது, முத்துவல்லி ஜாஃபர் அலி, செயற்குழு உறுப்பினர்கள் ஆசிக்அஹமது, முகமது ஷபிக், முகமது இப்ராஹிம், தலைமை இமாம் இப்ராகிம் பாகவி, மற்றும் மகாசபையாளர்கள் நூறு முகமது, சேட், அரசத், மோதினார்கள் உசேன், அசரப், ஜமாத்தார்கள் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு பிறை பார்க்கும் நிகழ்வு கலந்து கொண்டனர். 

தமிழகம் முழுவதும் பிறை தென்பட்ட காரணத்தினால் செவ்வாய் கிழமை முதல் ரமலான் நோன்பு ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து ரமலான் நோன் பையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற உள்ளதாக அத்தர் ஜமாஅத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்..

Loading