இருதய நோய் குறித்த விழிப்புணர்வு,மற்றும் இருதயம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கங்கள்,உடற்பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை வி.ஜி.மருத்துவமனை சார்பாக துடியலூர் ரன் எனும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.வி.ஜி.மருத்துவமனை வளாகம் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், சி.ஆர்.பி.எஃப்.டெபுடி கமாண்டன்ட் சிஷ்ராம் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தான் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
போட்டிகளை ஒருங்கிணைத்த வி.ஜி.மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.மனிதர்களுக்கு இருதயம் என்பது மிக முக்கியமான ஒன்று.இந்த இருதயத்தை பாதுகாப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும், இருதய நோய் குறித்து அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். 5 கிலோமீட்டர்,10 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் பெண்கள், காவல் ஆணையர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர்.
Leave a Reply