கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி ஆகியோர் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. முன்னதாக சாய்பாபா காலனி பாரதி பார்க் சாலையில் துவங்கிய வாக்கத்தானை மூத்த வழக்கறிஞர் ஏ.கே.எஸ் என். சுந்தரவடிவேலு துவக்கி வைத்தார்.
இந்த வாக்கத்தானில் கலந்துகொண்ட 250 க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். சாய்பாபா காலனி பாரதி பூங்காவில் தொடங்கி 3 கிமீ நடந்து விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை அடைந்தனர். வாக்கத்தானின் நோக்கம் குறித்து விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் கூறுகையில்,கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் எச்.பி.வி தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் விதமாகவும், ஹெச்.பி.வி. தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்றதாக தெரிவித்தார்.
Leave a Reply