போக்சோ சட்டத்தில் கைதான நபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை.

கோவை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக ஆனைமலை காவல் நிலையத்தில்  கருப்புசாமி(43) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் பிரபு ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்  பாராட்டினார்.

Loading