கோவை உக்கடம் பெரிய குளத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிதக்கும் சூரிய ஒளி மின் ஆலை அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தலின் பேரில் கோவை மாநகராட்சி உக்கடம் பெரிய குளத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கெப்பாசிட்டீஸ் திட்டம் மற்றும் ICLEI உடன் இணைந்து 154 கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட மிதக்கும் சூரிய ஒளி மின் ஆலை 145.00 லட்சம் மதிப்பீட்டில் 50 சென்ட் பரப்பளவில் அமைக்கும் பணி இன்று துவங்கப்பட்டது.
இந்நிகழ்வில் செயற்பொறியாளர் கருப்புசாமி உதவி செயற்பொறியாளர் ஹேமலதா உதவி பொறியாளர் சரவணக்குமார் மற்றும் ICLEI நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply