தொடக்கப்பள்ளி கட்டிடங்களை மாணவர்களைக் கொண்டு திறந்து வைத்த மாநகர ஆணையாளர்.

சித்தாபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்களை கோவை மாநகராட்சி ஆணையாளர் பள்ளி குழந்தைகளை வைத்து திறந்து வைத்தார்.  கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 67 வது வார்டுக்கு உட்பட்ட சித்தாப்புதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் ஆகிய கட்டிடங்கள் தன்னார்வலர்கள் (CRI PUMPS) மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் புனரமைக்கப்பட்ட சித்தாப்புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பள்ளி மாணவர்களை கொண்டு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் இடையே உரையாற்றிய ஆணையாளர் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் எனவும் பள்ளிக்கு அதிக விடுப்புகள் எடுப்பதை தவிர்த்து நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் எனவும் மாணவ மாணவிகள் வாசிப்பு திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த  புனரமைப்புகளை மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

Loading