வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிக்கு அனுப்புவதற்கான கணினி வழி முதலாவது குலுக்கள் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு பிரித்தனுப்புவதற்கான கணினி வழியில் முதலாவது குலுக்கல் (1st Randomization) மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பு அறையில் (Strong Room) இருப்பு வைக்கப்பட்டிருந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு பிரித்தனுப்புவதற்கான கணினி வழியில் முதலாவது குலுக்கல் (1st Randomization) மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட வருவாய் அலுவலர்  ஷர்மிளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 10சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தினை பிரித்து அனுப்பி வைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. அதன்படி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 388 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களும்,388 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 420 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும், சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு 398 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 398 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 430 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 526 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 526 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 569 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும், கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு 360 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 360 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 390 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 375 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 375 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 406 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும். கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு 303 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 303 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 328 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும்,

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு 390 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 390 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 423 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு 369 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 369 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 399வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு 325 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 325 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 352 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும், வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு 285 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 285 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 309 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும்,  என மொத்தம் 3719 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3719 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 4026 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும், ஆகமொத்தம் 11464 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி வழியில் முதலாவது குலுக்கல் (1″ Randomization) மூலமாக அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது.

Loading