தேர்தல் குறித்தான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒளிரும் விளம்பரப் பலகைகள்.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசு சார்பில் அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பொதுமக்களுக்கு தேர்தல் குறித்தும் வாக்குரிமை, மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி பந்தய சாலையில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒளிரும் விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர பலகைகளில் தேர்தல் என்பது எவ்வளவு முக்கியமானது வாக்குரிமையின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்தான  வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

Loading