கோவை மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருப்போர் தங்கள் படைகலன்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பாராளுமன்ற தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டதன் விளைவாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் புறநகர் பகுதியில் படைக்கலன் உரிமம் பெற்று படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக இருப்பு வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply