கோவை வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய ஆண் ஒற்றை யானை நேற்று இரவு முதல் பேரூர் பச்சாபாளையம் பகுதியில் சுற்றி வருகிறது. இன்று காலை அந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் தற்போது அந்த யானை குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. மேலும் சிறுவாணி சாலையை அவ்வப் போது கடந்தும் அருகில் உள்ள வாழை தோட்டத்திலும் புகுந்து வருவதால் வனத் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் யானையை பத்திரமாக வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பச்சாபாளையத்திக் இருந்து வெளியேறிய யானை சிறுவாணி மெயின் ரோட்டை கடந்து எதிர் புறம் உள்ள குளத்திற்குள் செல்ல முயன்றது அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டவாறு ஓடியதால் மிரண்ட யானை திடீரென சாலை ஓர கடைகளுக்குள் புகுந்து செல்ல முயன்றது. அப்போது அங்கு மது போதையில் நின்று கொண்டிருந்த மருதமுத்து என்பவரை கீழே தள்ளிவிட்டதில் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து அவரை மீட்ட வனத்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வனத்துறை வாகனத்தில் அனுப்பி வைத்தனர் மேலும் தற்போது பச்சாபாளையம் பகுதியில் அந்த யானை முகமிட்டு இருப்பதால் வனத் துறையினர் யானையை கண்காணித்து வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் யானை பார்க்க குவிந்து வருவதால் யானையை விரட்டுவதில் வனத் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது மேலும் அங்கு கூடி உள்ள பொது மக்களை களைந்து செல்ல காவல்துறை உதவியை வனத் துறையினர் நாடி உள்ளனர் இந்நிலையில் முதியவர் மருதமுத்துவை யானை கீழே தள்ளிவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Leave a Reply