கோவை திருச்சி சாலை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலையொட்டி பாரத பிரதமரின் பொது மக்களை சந்திக்கும் சாலை காட்சி நிகழ்ச்சி பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களை கூறி காவல் துறையினர் அனுமதி வழங்கும் மறுத்து இருந்த நிலையில், பா.ஜ.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் அதனை அவசர மனுவாக விசாரணை செய்த உயர் நீதிமன்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பொது மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில் இன்று பலத்த பாதுகாப்புடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்த இருந்த நிலையில் நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்ததாக இன்று காலை 11 மணி அளவில் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டு இருந்த நிலையில் திடீரென அங்கு நுழைந்த காவல் துறையினர் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். இது குறித்தான தகவல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோருக்கு தெரியவந்தது.
உடனடியாக அங்கு குவிந்த பெற்றோர் அச்சத்துடன் அவசர அவசரமாக தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் அந்த தொலைபேசி அழைப்பு வதந்தி என தெரிய வந்தது. பிரதமர் மோடி கோவை நிகழ்ச்சியில் பங்குபெறும் நிலையில் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் மீண்டும் கோவையில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
Leave a Reply