GO-BLUE வாக்கத்தான் டி-ஷர்ட் மற்றும் லோகோ அறிமுகம்.

கோவையில் ஏப்ரல் 7-ம் தேதி தேர்டு ஐ செண்டர் ஆப் ஆட்டிசம் சார்பாக ஆட்டிசம் விழிப்புணர்வு GO-BLUE வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வினை துவக்கி வைக்கிறார்.ஆட்டிசம் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்படும் இந்த வாக்கதான், ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் இருந்து தொடங்கி ரேஸ்கோர்ஸ் சுற்றி நடந்து பிறகு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இறுதியாக நிறைவடைகிறது. 

முன்னதாக தேர்டு ஐ நிறுவனம் சார்பாக GO-Blue ஆட்டிசம் வாக்கதான் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் டி-ஷர்ட் மற்றும் லோகோ அறிமுக விழா கோவை ராமநாதபுரத்தில் உள்ள தேர்டு ஐ ஒ ஆட்டிசம் செண்டரில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய சரண்யா ரெங்கராஜ் Go Blue விழிப்புணர்வு வாக்கத்தான் என்பது ஆட்டிசம் பாதிக்கபட்ட குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை சமுகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத்தபடுவதாகவும் குறிப்பாக பெற்றோர்களுக்கு இந்த விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஒரு வயதில் உள்ள குழந்தைகளின் செயல்பாடுகளை தாய் உணர்ந்து கொண்டு ஏதேனும் மாறுபாடு தெரிந்தால் உடனடியாக இது போன்ற ஆட்டிசம் பயிற்சி மையத்தை அணுக வேண்டுமென்றார். மேலும் வெளிநாடுகளில் எடுக்கபட்ட கணக்கெடுப்பில் பிறக்கும் 68 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக குறிப்பிட்டவர் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு ஆட்டிசம் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பயிற்சி மையத்தை அணுகி முறையான பயிற்சியின் மூலம் பாதிப்பை நம்மால் குறைக்க இயலும் என்றார்.

Loading