பயம் இருப்பதால் தான் பாஜகவினர் கோவையை சுற்றி வருவதாக அமைச்சர் முத்துச்சாமி பேச்சு.

2024 பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி முடிவு செய்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஸ்டார் வேட்பாளர்கள் அதிகம் களமிறங்குகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை பாராளுமன்ற தொகுதி ஸ்டார் தொகுதியாக பார்க்கபடும் நிலையில் கோவை தொகுதியை கைபற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் திமுக களமிறங்கியுள்ளது. இன்னிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி, “கோவை தொகுதியை விட்டு தந்த கூட்டணி கட்சிக்கு நன்றி தெரிவித்தார். கோவை ஒரு முக்கியமான தொகுதி, இங்கு மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றும், வீடு வீடாக மக்களை சந்திப்பது தான் வெற்றியை தேடி தரும் என கூறினார். செந்தில் பாலாஜி நிறைய பணிகளை செய்துள்ளார் என்றவர் இன்றும் அவர் கோவையை பற்றி யோசித்து கொண்டிருக்கிறார் என்றார். 

கோவையில் வேறு யாரும் நுழைந்து விடக்கூடாது, உங்களை மீறி பாராளுமன்றத்தில் அண்ணாமலை எதுவும் செய்துவிட முடியாது என்றவர் பயம் இருப்பதால் தான் பாஜகவினர் கோவையை சுற்றி வருகிறார்கள் என்றும் அவர்கள் ஆயிரம் கூட்டம் நடத்தினாலும் 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்றார். மத்தியில் நமது கூட்டணி அரசு அமைந்தால், நமக்கான நிறைய திட்டங்களை பெற முடியும். மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

Loading