கோவையை மையமாக கொண்டுள்ள தாய் கிரீன் பவர் சொல்யூஷன் நிறுவனம். புதுமையான பசுமை தீர்வுகள் மற்றும் நிலையான தயாரிப்புகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சேவைகளையும் வழங்கி வருகிறது. வணிகங்கள் மற்றும் தனி நபர்கள் தங்கள் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க உதவுகின்றன என்றாலும் அனைவருக்கும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்நிறுவனம் செயலாற்றி வருகிறது.
இதனிடைய கோவையை சேர்ந்த சிவா சூரியன் என்ற இளைஞர் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் கடந்த ஆண்டு இரண்டாம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனி சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். காஷ்மீர் லடாக் முதல் கன்னியாகுமரி வரை 10000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறார். இவரை ஊக்கப்படுத்தும் விதமாக தாய் கிரீன் பவர் சொல்யூஷன் நிறுவனத்தின் சார்பாக தலைமை செயல் அதிகாரி பொன்சனா சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளும் சிவ சூரியனுக்கு நிதியுதவி வழங்கி பெருமைப்படுத்தினார். தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தாய் கிரீன் பவர் சொல்யூஷன் நிறுவனத்தினர் கேட்டுக்கொண்டனர். மேலும் சுற்று சூழல் பாதிக்காத வண்ணம் கிரீன் எனர்ஜி கொண்டு தாய் கிரீன் பவர் சொல்யூஷன் நிறுவனத்தினர் வாகனங்களை உருவாக்கி வருகின்றனர். இனிவரும் காலங்களில் கிரீன் எனர்சி மட்டுமே சுற்றுசூழலை பாதுகாக்கும் எனவும் எனவும் தெரிவித்தனர்.
Leave a Reply