பௌர்ணமி, பங்குனி உத்திரம், பண்ணாரி குண்டம் மற்றும் வார இறுதி நாட்களான (23, மற்றும் 24) ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து பழனி, திருவண்ணாமலை, பண்ணாரி திருக்கோவில் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்தான அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்.., சார்பாக பௌர்ணமி 24ம் தேதியும், பங்குனி உத்திரம் மற்றும் பண்ணாரி குன்டம் 25ம் தேதியும் நடைபெறவுள்ளது.
மேலும் வார இறுதி நாட்களான 23,24 ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து பழனி திருவண்ணாமலை, பண்ணாரி திருக்கோவில், மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக பங்குனி உத்திரம் அன்று பக்தர்கள் பழனி செல்ல 30 சிறப்பு பேருந்துகளும், திருவண்ணாமலைக்கு செல்ல 25 சிறப்பு பேருந்துகளும், பண்ணாரி திருக்கோவில் செல்ல 50 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply