2024 மக்களவை தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்ததுடன் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. தற்போது பாஜக தலைமையில் பாமக, ஐ.ஜே.கே, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிடட 9 கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கபட்டுள்ளது. இன்னிலையில் ஒதுக்கபட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் நிருவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார். அதில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் பாட்டாளி மக்கள் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
Leave a Reply