நாடாளுமன்ற தேர்தல்: கோவையில்  மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களில் ஆய்வு.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள், ஆய்வுப்பணிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாநகராட்சி கணபதி பகுதியில் உள்ள சி எம் எஸ் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு சாவடியை கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி சிட்டி உயர்நிலைப் பள்ளியில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடியை ஆய்வு செய்தார். தொடர்ந்து கணபதி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வாகன தணிக்கையையும் ஆய்வு செய்தார். மேலும் வெள்ளலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிக்கை கோவை மாவட்ட வருவாய் அலுவலரும் பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷர்மிளா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Loading