தமிழகத்தின் அறிவியல் மேதை ஜிடி நாயுடு அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவை அவினாசி சாலை ஜிடி நாயுடு அருங்காட்சியகத்திலுள்ள அவரது நினைவிடத்தில் பல்வேரு தரப்பினரும் மலர் தூவி மறியாதை செய்து வருகின்றனர். இன்னிலையில் தற்போது பாராளுமன்ற பொதுத்தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில் கோவை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஜிடி நாயுடுவின் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உருப்பினருமான நா.கார்த்திக், வார்டு செயலாளர்கள் விஜயகுமார், நவீன்முருகன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புசெழியன், அரசு வழக்கறிஞர் அருள்குமார், மாமன்ற உறுப்பினர்கள் சுமா விஜயகுமார், முனியம்மாள் மற்றும் வேங்கிடகிரி, ஆர்ஆர்.மோகன்குமார், ஸ்ரீமான் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply