தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தமிழகம் தந்த அறிவியல் மாமேதை ஜிடி நாயுடுவின் திருவுருவச்சிலை மற்றும நினைவிடத்தில் மலர்தூவி மறியாதை செலுத்தினார்.
எந்திரவியல், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகள் செய்து, எண்ணற்ற அரிய கண்டுபிடிப்புகள் உருவாக்கியவர் ஜிடி நாயுடு. தனது கண்டுபிடிப்பு முறைகளை, பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் கற்றுக்கொடுக்க முன்வந்த தேசியவாதி.
கோயம்புத்தூரில், இந்தியாவிலேயே முதல் மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைத்த பெருமைக்குரியவர். தலைமுறைகள் பல கடந்தும் அனைவரும் கொண்டாடும் அறிவியல் மாமேதை ஐயா ஜிடி.நாயுடு பாஜக அண்ணாமலை புகழாரம் சூட்டினார். மேலும் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை உடைய அனைத்து இளைஞர்களுக்கும் ஒளிவிளக்காகத் திகழும் இந்தியாவின் எடிசன் ஐயா ஜிடி.நாயுடு அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Leave a Reply