கோவை ஆவாரம்பாளையம் லட்சுமிபுரம் பகுதியில் கார்களை சர்வீஸ் செய்து தரும் பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் இரண்டு வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் சர்வீஸுக்கு வந்த மற்ற கார்களை பகுதியுள்ள காலி இடத்தில் பணியாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கோவை தெற்கு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயர் அங்கு விரைந்து தீயணைப்புத் துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் தீ அருகே இருந்த மற்ற கார்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும் இது குறித்து தகவல் அறிந்த கோவை காட்டூர் காவல் நிலைய போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்பகுதியில் இருந்த காய்ந்த புற்களில் பொதுமக்கள் சிலர் தீ வைத்ததும் அந்த தீ காரில் பரவியது தெரிய வந்துள்ளது.
Leave a Reply